என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாலை பணி"
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட மக்கள் நலப்பேரவையின் ஆகஸ்டு மாத கூட்டத் பேரவையின் தலைவர் பொறியாளர் தங்கராசன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்.பழனிசாமி வரவேற்று பேசினார். செயலாளர் மா.பாலகிருஷ்ணன் மாதாந்திர அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ராமச்சந்திரன் மாதாந்திர வரவு-செலவு அறிக்கையை சமர்பித்தார்.
தஞ்சை மாநகராட்சி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. போக்குவரத்து காவல்துறை செயல்பாடும் திருப்தியாக இல்லை. அண்ணா சாலையில் ராமநாதன் மன்றம் ஓரமாக இருக்கும் நடைமேடையில் நீண்ட நாட்களாக செயல்பட்டு வரும் டாக்சி நிறுத்தத்தை அகற்ற வேண்டும். சம்பந்தமில்லா இடங்களில் ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்றும் மாநகராட்சி நிர்வாகம் இதனை அகற்றி மக்கள் நடைமேடையை பயன்படுத்த வழிவகுக்க வேண்டும்.
தஞ்சை-நாகை சாலையில் பூண்டியில் இருந்து அமைக்கப்பட்ட புறவழிச் சாலை பணி தொடராமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல் சாலியமங்கலம்-பாபநாசம் சாலையை இணைக்கும் புறவழிச்சாலையும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலை பணியை செய்து முடிக்க வேண்டும்.
கரந்தை பகுதி சாலை மிகவும் குறுகலாக உள்ளது. பள்ளி, கல்லூரிகள் இருப்பதாலும், காலை மாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் சாலையை அகலப்படுத்த வேண்டும், அல்லது பூக்குளம் வலம்புரி பகுதி வழியாக வெண்ணாற்றங்கரை செல்லும் சாலையை விரிவுப்படுத்தி போக்கு வரத்தை அவ்வழியாக முறைப்படுத்திட வேண்டும். மேலும் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் சாலையைத் தவிர மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சாலைகள் மிக மோசமாக குண்டும் குழியுமாக இருப்பதை உணர்ந்து ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என்பது உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கோவை:
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
அவரிடம் கோவை சாரமேடு குடியிருப்போர் நல சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் வந்து மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது-
100 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் சாரமேடு பகுதியில் வசித்து வருகிறோம். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் விவசாய, கூலித் தொழிலாளர்கள் ஆவார்கள்.
கடந்த 1970-ம் ஆண்டு எங்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்கியது. ஆனால் தற்போது உக்கடம் மேம்பால இணைப்பு சாலைக்காக எங்கள் பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள்.
முன் அறிவிப்பின்றி இவ்வாறு காலி செய்ய சொல்வது எங்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி உள்ளது. நாங்கள் வீட்டு வரி ரசீது, பட்டா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் வைத்து இருக்கிறோம். எனவே எங்கள் இடம் பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும். இணைப்பு சாலை பணிக்காக எங்களை காலி செய்யுமாறு கூற கூடாது.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
கோவை சோமனூர் பகுதியை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி நிரூபர்களிடம் கூறியதாவது-
சோமனூர் அருகே நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.சோமனூர் பகுதியில் கள்ள மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதனை ஒழிக்க அரசே மதுபான கடைகளை திறக்க வேண்டும். சோமனூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். மின் மயான பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்த மகாலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு பொன்னுசாமி, பாரதிய ஜனதா பிரகாஷ், தே.மு.தி.க. ஆனந்தன், மதன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். #Tamilnews
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை தேவதானப்பட்டிக்கு கொண்டு வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதேபோல் மாணவ-மாணவிகளும் இங்கு வந்து வெளியூர்களுக்கு செல்வதால் தேவதானப்பட்டி முக்கிய சந்திப்பாக உள்ளது.
கோவை, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருவதால் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. பைபாஸ் சாலை அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது முழுவதும் முடிவடைந்த நிலையில் சாலை அமைக்கப்படாததால் விபத்து அபாயம் உள்ளது.
இதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக சாலை சாரல் மழைக்கே செல்லரித்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பால பணிகள் முடிந்துள்ளது. ஆனால் சாலை சீரமைக்கப்படாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் சார்பில் பரேபூர் சாலையில் வேலை நடந்தபோது, ஒரு நாயைக் கொன்று புதைத்து அதன் மீது சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
போலீசில் இதுபற்றி புகாரும் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மனுதாரர் குறிப்பிட்ட சாலைக்கு சென்று நாயின் உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்தினர்.
மேலும், சாலைப் பணி மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாலைப் பணிக்காக நாயை பலி கொடுத்தார்களா? அல்லது இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலை போட்டார்களா? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். #RoadOverDog
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்